ADDED : ஜன 10, 2024 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ராமர், 28, கூலி தொழிலாளி, இவரது மனைவி கவிதா,22, இவர்களுக்கு 2013ல் திருமணம் ஆகி பத்து மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.
2015 ஏப்ரல் 20ல், இருவரிடையே ஏற்பட்ட தகராறில் கவிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் ராமரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ராமருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

