/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சரிவர பராமரிப்பின்றி தடுமாறும் 108 ஆம்புலன்ஸ்கள்
/
சரிவர பராமரிப்பின்றி தடுமாறும் 108 ஆம்புலன்ஸ்கள்
ADDED : நவ 24, 2024 07:33 AM
விருதுநகர் : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லாததால் இழுவை திறனின்றி வாகனங்கள் தடுமாறுகின்றன.
108 ஆம்புலன்ஸ் சேவை 2005ல் நாடு முழுவதும் துவங்கப்பட்டது. தமிழகத்தில் 2011 அ.தி.மு.க., ஆட்சியின் போது துவங்கப்பட்டது. தற்போது 1353 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. டிரைவர்கள், இ.எம்.இ., ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அழைத்த 7 நிமிடங்களுக்குள் விபத்து நடந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக முக்கிய சந்திப்புகள், பொது இடங்களில் தயார்நிலையில் இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் கடந்த ஆம்புலன்ஸ்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
இன்ஜின் கோளாறு உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் சரி செய்து தரப்படுகிறது. ஆனால் இழுவைத்திறன் குறைவு உள்ளிட்ட சிறு சிறு பராமரிப்புகள் செய்யப்படுவதில்லை. சில டிரைவர்கள் தங்கள் சொந்த செலவில் சரி செய்கின்றனர். அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் வேகமாக செல்லமுடியாமல் தடுமாறுகின்றன.
மேலும் 2020ல் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்பதை காட்டும் செயலி அறிமுகப்படுத்தப்படும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இத்திட்டமும் இன்று வரை செயல்படுத்தவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இந்த செயலி சேவை செயல்பாட்டில் உள்ளது. எனவே அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் நலனை கருத்தில் கொண்டு பிக்-அப், பராமரிப்பு பணிகளை முழுவீச்சில் செய்யவும், ஆம்புலன்ஸ் வருவதை சரிபார்க்கும் செயலியை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.