/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் 115 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றம்; குதிரைவாலி, சிறுதானியங்கள் சாகுபடி

ADDED : நவ 30, 2024 05:55 AM
சிவகாசி; சிவகாசி தாலுகாவில் பயன்பாடு இன்றி கிடந்த 115 ஏக்கர் தரிசு நிலங்கள் வேளாண் துறையின் முயற்சியால் விளை நிலங்களாக மாற்றப்பட்டு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.
சிவகாசி தாலுகாவில் நெல், மக்காச்சோளம், வாழை, பருத்தி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. பெரும்பான்மையான கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. இவற்றில் வளமாக்கக்கூடிய தரிசு நிலங்களை சிவகாசி வேளாண் துறையினர் கண்டறிந்து அவற்றை விளை நிலங்களாக மாற்ற முயற்சி செய்தனர்.
இதற்காக கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் மானியத்தின் உதவியுடன் புதுக்கோட்டை, காரிசேரி, மாரனேரி, ஈஞ்சார், செங்கமலப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 115 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டது.
தற்போது இந்த நிலங்களில் குதிரைவாலி, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தரிசு நிலங்களுக்கு உரிய விவசாயிகள் விவசாயம் செய்து மகிழ்ச்சியில் உள்ளனர்.
உதவி வேளாண்மை இயக்குனர் சுந்தரவள்ளி கூறுகையில், நீண்ட நாட்களாக விவசாயம் இல்லாமல் தரிசு நிலமாக உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவற்றில் வளமாக்கக்கூடிய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு மானியத்தின் உதவியுடன் விளை நிலமாக மாற்றப்பட்டு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.