/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வ.புதுப்பட்டி பேரூராட்சி 11 வது வார்டு விசிட்
/
வ.புதுப்பட்டி பேரூராட்சி 11 வது வார்டு விசிட்
ADDED : அக் 30, 2024 04:41 AM
வத்திராயிருப்பு, : வ.புதுப்பட்டி பேரூராட்சி 11வது வார்டில் சிட்டாவார் தெருவிற்கு செல்லும் தார் ரோடு சேதமடைந்தும், மின் கம்பத்தின் அடிமட்ட பகுதி சிதைந்தும், குறுகிய சந்துகளில் உள்ள மண் ரோடுகளால் மழை நேரத்தில் சகதி ஏற்பட்டு மக்கள் சிரமப்படும் நிலையும் காணப்படுகிறது.
பிள்ளையார் கோயில் வடக்கு தெரு, பிரசிடெண்ட் தெரு, சிட்டாவார் தெரு பாம்பாலம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களைக் கொண்டது இந்த வார்டு. இதில் பிள்ளையார் கோவில் வடக்கு தெருவில் இருந்து செல்லும் தார் ரோடு போட்டு பல ஆண்டுகளான நிலையில் தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது.
ஊராட்சி அலுவலகத்தின் கீழ் புறம் சிட்டாவார் தெருவிற்கு செல்லும் தார் ரோடு சிதைந்து ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. அதே தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதைந்து வருகிறது. குறைந்த அளவு குடியிருப்புகள் உள்ள சந்துக்களில் உள்ள ரோடு மண் ரோடாக இருப்பதால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
சந்துகளில் பேவர் பிளாக் ரோடு
-அமராவதி, குடியிருப்பாளர்: பிரசிடெண்ட் தெரு சந்துகளில் வீடுகள் இருக்கும் நிலையில் அங்கு மண் ரோடாக இருப்பதால் மழை நேரத்தில் சகதி ஏற்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே, சந்துகளில் பேவர் பிளாக் ரோடு அமைத்து தர வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
பவானி, வார்டு உறுப்பினர்: வார்டில் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் ரோடுகள் போடப்பட்டுள்ளது. சிட்டாவார் தெருவில் தண்ணீர் தொட்டி அமைக்கவும்,, சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கவும் பேரூராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளேன். தெரு விளக்குகள், குடிநீர் சப்ளை திருப்திகரமாக உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: சேதமடைந்த தார் ரோட்டை சீரமைக்கவும், குடியிருப்புகள் உள்ள சந்து பகுதிகளில் ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.