/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓராண்டில் 12 லஞ்ச வழக்குகள் ரூ.16 லட்சம் பறிமுதல்
/
ஓராண்டில் 12 லஞ்ச வழக்குகள் ரூ.16 லட்சம் பறிமுதல்
ஓராண்டில் 12 லஞ்ச வழக்குகள் ரூ.16 லட்சம் பறிமுதல்
ஓராண்டில் 12 லஞ்ச வழக்குகள் ரூ.16 லட்சம் பறிமுதல்
ADDED : ஜன 02, 2026 05:53 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் 2025ல் மட்டும் 12 வழக்குகள் பதியப்பட்டு ரூ.16 லட்சத்து 62 ஆயிரத்து 500 லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராமச் சந்திரன் கூறியதாவது:
அரசு அலுவலர்கள், மக்களிடம் லஞ்ச பணம் கேட்டதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக பொறி வைப்பு செய்து வி.ஏ.ஓ., தலையாரி, கூட்டுறவு சார்பதிவாளர், மின் உதவி பொறியாளர், பேரூராட்சி இளநிலை பொறியாளர் என 8 பேர் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் கைது செய்யப் பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 3500 லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டும், வீடுகளில் ரூ.8 லட்சம் வரையில் லஞ்ச பணமாக இருக்க லாம் என கைப்பற்றப் பட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு திடீர் சோதனையின் போது துணை கலெக்டர், பொறுப்பு சார் பதிவாளர், தீயணைப்பு அலுவலர்கள் மீது 3 வழக்குகள் பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ரூ.7 லட்சத்து 59 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது. இது தவிர சொத்துக்கள் அதிகமாக குவித்ததாக சுரங்கத்துறை உதவி இயக்குனர், நகராட்சி அலு வலக உதவியாளர், கிராம ஊராட்சி செயலாளர் ஆகிய மூவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
12 வழக்குகளில் 55 பேர் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர், என்றார்.

