/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்
/
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 02, 2026 05:52 AM

விருதுநகர்: விருதுநகரில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. இந்நிலையில் விருது நகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், பராசக்தி மாரியம்மன், ரெங்கநாதர் கோயில்கள், ராமர் கோயில், பாலாஜி கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பான ஆண்டாக அமைய வழிபாடு செய்து சென்றனர்.
*அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் சீரடி சாய்பாபா கோயிலில் பாபாவிற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சொக்க நாதருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
ஆயிரம் கண் மாரி யம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில், பழநி ஆண்டவர் கோயில், வாழ சுப்பிரமணியர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பூஜைகள் நடந்தது.
* இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சாத்துார் பத்ரகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், முருகன் கோயில் மற்றும் பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில் வெங்கடாஜலபதி கோயில், கிருஷ்ணன் கோயில்களில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

