/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு
/
சர்ச்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு
ADDED : ஜன 02, 2026 05:52 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சர்ச்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு திருப்பலி, மறையுரை நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் விருதுநகர் மறைவட்ட அதிபர் பாதிரியார் அருள்ராயன், இணை பாதிரியார் பிரின்ஸ் தலைமையில் நேற்று அதிகாலை 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப் பலியும் மறையுரையும் நடந்தது.
பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆரோக்கியம், விருதுநகர் நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந் தோணிச்சாமி தலைமை யிலும் நன்றி வழிபாடுகளும் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும் நடந்தது.
ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் தேவராஜ், சாத்துார் இயேசுவின் திரு இருதய சர்ச்சில் பாதிரியார் காந்தி சவரிமுத்து, ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் வனத்தையன், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், தும்மச்சின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச் கிளை பங்குகளில் பாதிரியார் மரியதுரை, சிவகாசி புனித லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், காரியாபட்டி அமல அன்னை சர்ச்சில் ஜோசப் அமலன், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், மீனம்பட்டி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ், வடபட்டி அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் ரோலென்ட், சாட்சியாபுரம் மரியானுஸ் நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் பாதிரியார் அற்புதசாமி தலைமையில் நன்றி வழிபாடு, புத்தாண்டு சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. தேவாலயங்களில் நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று ஜன. 1 காலை 8:00 மணி முதல் சர்ச் களில் புத்தாண்டு திருப் பலிகள் நடந்தன.
*அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் அதிகாலை 12:00 மணிக்கு ஊட்டி பாஸ்டர் ரஞ்சன் கனகமணி தலைமையில் சிலுவை ஏந்தி பவனி நடந்தது. பின்னர் புத்தாண்டிற்கான பிரார்த்தனை நடந்தது.

