/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏப். மாதத்தில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
/
ஏப். மாதத்தில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ஏப். மாதத்தில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ஏப். மாதத்தில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ADDED : மே 22, 2025 11:58 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏப்., மாதத்தில் மட்டும் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.
குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.
18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
ஏப். 1 முதல் 30 வரை 12 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து கொண்ட மணமகன் மீதும் திருமணத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆறு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.