ADDED : ஜன 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 35. தனியார் நிறுவன விற்பனை மேலாளர்.
தந்தை விஜய பெருமாள் ரியல் எஸ்டேட் அலுவலக வாட்ச்மேன். நேற்று முன்தினம் காலை இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். மதியம் வீட்டிற்கு சாப்பிட வெங்கடேஷ் அம்மாவுடன் வந்தார்.
பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரிக்கின்றனர்.

