/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.பி.கே., பள்ளி மாணவிகள் 13 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை
/
எஸ்.பி.கே., பள்ளி மாணவிகள் 13 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை
எஸ்.பி.கே., பள்ளி மாணவிகள் 13 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை
எஸ்.பி.கே., பள்ளி மாணவிகள் 13 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை
ADDED : ஏப் 17, 2025 05:33 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 13 பேர் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற்றுஉள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்விதுறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு நடத்தியது. இதில், எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 13 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் பயிலும் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 12 ஆயிரம் வீதம் மொத்தம் 4 ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர்சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் காசி முருகன், பள்ளித் தலைவர் மதிவாணன், செயலர் ராம்குமார், பள்ளி நிர்வாக குழுவினர், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.