ADDED : நவ 17, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள 135 கிலோ குட்கா பறிமுதல் செய்து இரண்டு பேரை தளவாய்புரம் போலீசார் கைது செய்தனர். தளவாய்புரம் அருகே இனாம் கோவில்பட்டி பகுதியில் ஆட்டோவில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தவர்களை தளவாய்புரம் போலீசார் சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்னச்சாமி 48, செட்டியார்பட்டியை சேர்ந்த ஹரீஷ் 24, குட்காவை வினியோகம் செய்வதற்காக முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.
கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து குட்கா, ரூ.7800, ஆட்டோ, இரண்டு அலைபேசிகள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

