/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூதாடிய தி.மு.க., கவுன்சிலர், வி.ஏ.ஓ., வங்கி கேஷியர் உட்பட 14 பேர் கைது
/
சூதாடிய தி.மு.க., கவுன்சிலர், வி.ஏ.ஓ., வங்கி கேஷியர் உட்பட 14 பேர் கைது
சூதாடிய தி.மு.க., கவுன்சிலர், வி.ஏ.ஓ., வங்கி கேஷியர் உட்பட 14 பேர் கைது
சூதாடிய தி.மு.க., கவுன்சிலர், வி.ஏ.ஓ., வங்கி கேஷியர் உட்பட 14 பேர் கைது
ADDED : ஜூன் 27, 2025 03:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், சாத்துார் தி.மு.க., பிரமுகர், வங்கி கேஷியர், வி.ஏ.ஓ., உட்பட 14 பேரை மல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.87 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர்.
சிவகாசி ஈஞ்சார் விலக்கு சப்தகிரி நகரில் உள்ள கிருபா ரெகரேஷன் கிளப்பில் நேற்று முன்தினம் இரவு சீட்டாட்டம் நடப்பதாக ஐ.ஜி.தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். கிளப் மேலாளர் செல்ல பாண்டியன், ரங்கராஜ், பாலசுப்பிரமணியன், அனந்த ராமகிருஷ்ணன், ரகு, திருக்குமார், பன்னீர்செல்வம், பாண்டி முருகன், மாரியப்பன், முப்பிடாதி, ஜெயக்குமார், சுப்பையா, பழனி முருகன், சுரேஷ்குமார் ஆகிய 14 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த ரூ.87 ஆயிரத்து 500ம், சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட வர்கள் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சுப்பையா ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலராகவும், ஜெயக்குமார் சாத்துார் நகர தி.மு.க., பிரமுகராகவும், பழனி முருகன் ராஜபாளையத்தில் வி.ஏ.ஓ.,வாகவும், சுரேஷ்பாபு தமிழ்நாடு வங்கியில் கேஷியராகவும் பணியாற்றுபவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.