/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க 14 தனிப்படை: விதிமீறல்கள், விபத்தை தவிர்க்க நடவடிக்கை
/
மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க 14 தனிப்படை: விதிமீறல்கள், விபத்தை தவிர்க்க நடவடிக்கை
மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க 14 தனிப்படை: விதிமீறல்கள், விபத்தை தவிர்க்க நடவடிக்கை
மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க 14 தனிப்படை: விதிமீறல்கள், விபத்தை தவிர்க்க நடவடிக்கை
ADDED : அக் 15, 2024 04:45 AM
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
சிவகாசி பகுதியில் நிரந்தர உரிமம் பெற்ற 2500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளது. தவிர தீபாவளி சீசன் விற்பனைக்காக 1000 க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மாவட்டம் முழுவதும் உள்ள நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யவும், விபத்து ஏற்படாமல் கண்காணிக்கும் வகையிலும் வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 14 தனிப்படைகள் அமைத்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த தனிப்படையினர் பட்டாசு கடைகளில் உரிமம், பசுமை பட்டாசுகள் தவித்து தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா, அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, தீயணைப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பட்டாசு தீப்பெட்டி தொழில் தனி தாசில்தார் திருப்பதி கூறுகையில், நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் விதிமுறைகளின் படி செயல்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வின் போது குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
இரண்டாவது முறையாக ஆய்வு செய்யும் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு விற்பனை கடைகள் அருகே தகர செட் அமைத்து பட்டாசு இருப்பு வைத்திருந்தால் கடையின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.