/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்மாதிரி சிறப்பு அமர்வில் 1482 வழக்குகளில் தீர்வு
/
முன்மாதிரி சிறப்பு அமர்வில் 1482 வழக்குகளில் தீர்வு
முன்மாதிரி சிறப்பு அமர்வில் 1482 வழக்குகளில் தீர்வு
முன்மாதிரி சிறப்பு அமர்வில் 1482 வழக்குகளில் தீர்வு
ADDED : நவ 24, 2025 09:23 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உயர்நீதிமன்றம், துணை நீதிமன்றங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அனைத்து சிறிய குற்ற வழக்குகளையும் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தலைமையில் அமர்வு அமைக்கப்பட்டது.
மாவட்ட நீதித்துறை, வழக்கறிஞர்கள், போலீசார் இதற்கு ஏற்ற பொருத்தமான வழக்குகளை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு முன் சமர்ப்பித்தனர். அதே போல் வாதி, எதிரிகளுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டது. நவ. 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் குற்றவியல் நீதித்துறை முன்பு வழக்குகளின் வாதி, எதிரிகள் ஆஜர் ஆகினர்.
இதில் தென்மண்டலத்தில் இந்த சிறப்பு அமர்வு விருதுநகர் மாவட்டத்தில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தியதில், போது 398 ஐ.பி.சி., வழக்குகள், 917 சிறப்பு, உள்ளூர் சட்ட பிரிவு வழக்குகள், 167 குடிபோதையில் வாகனம் ஓட்டி வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 1482 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.52 லட்சத்து 16 ஆயிரத்து 300 நீதிமன்றத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது.

