/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோட்டூரில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
/
கோட்டூரில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
கோட்டூரில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
கோட்டூரில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : ஜன 01, 2026 06:02 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோட்டூரில் 14 ம் நூற்றாண்டு சேர்ந்த கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கோட்டூர் பகுதியில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்களான, தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியர் செல்ல பாண்டியன், ஆய்வாளர் ஸ்ரீதர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்த பொழுது கல்வெட்டுடன் கூடிய செக்கு ஒன்றை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பாண்டிய நாடானது நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது இதற்குச் சான்றாக அதிக அளவில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், விளைந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு ஊரிலும் விவசாய சந்தைகளை உருவாக்கி விளை பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் இருந்துள்ளது. எண்ணெய் வித்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் கல் செக்குகள் அதிக அளவில் கிடைத்து வருகிறது. கல் செக்கை வழங்கியவரின் பெயரை பொறிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இந்த கல்வெட்டிலும் அவ்வாறு உள்ளது ராம பேரரையன் செய்துவித்த உரல், என்ற செய்தி கல்வெட்டில் உள்ளது. இந்த கல்வெட்டு 14ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியரது ஆகும். அந்த காலத்தில் எண்ணெய் எடுத்து வியாபாரம் செய்யும் அளவிற்கு இந்த பகுதி செழுமையாக இருந்துள்ளதாக தெரிகிறது. என்றனர்.

