நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : மதுரை புதூரைச் சேர்ந்தவர் முருகாயி 30. காரியாபட்டி அருகே சொக்கம்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார்.
பையில் 15 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம், நகை அட்டை வைத்திருந்தார். சொக்கம்பட்டிக்கு சென்று பையை திறந்து பார்த்தபோது பையில் இருந்த நகை, பணம், அட்டை காணாமல் போனது தெரிந்தது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

