/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 27, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்,:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் தனி தாசில்தார் தனராஜ் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த லாரியை சோதனை செய்ததில், 15 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது.
லாரி டிரைவர், உரிமையாளருமான திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்த தங்கதுரையிடம் விசாரித்ததில், திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது.
ரேஷன் அரிசியுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கதுரை, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்முருகன், காளிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.