/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனமழையால் ஆற்றில் வெள்ளம் வெளியேற முடியாமல் தவித்த 150 பேர் மீட்பு
/
கனமழையால் ஆற்றில் வெள்ளம் வெளியேற முடியாமல் தவித்த 150 பேர் மீட்பு
கனமழையால் ஆற்றில் வெள்ளம் வெளியேற முடியாமல் தவித்த 150 பேர் மீட்பு
கனமழையால் ஆற்றில் வெள்ளம் வெளியேற முடியாமல் தவித்த 150 பேர் மீட்பு
ADDED : நவ 02, 2024 02:39 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது.
இங்குள்ள மீன் கொத்திப்பாறை நீர்வீழ்ச்சியிலும், கல்லாற்றிலும் மழை பெய்து நீர்வரத்து ஏற்படும் போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குளிக்க செல்வது வழக்கம்.
தீபாவளி விடுமுறை என்பதால் நேற்று காலை முதல் ஏராளமானோர் ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர்.
மாலை, 5:30 மணிக்கு மேற்குத்தொடர்ச்சி மலை உச்சியில் திடீரென கனமழை பெய்ததால் நீர்வீழ்ச்சியிலும், ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அங்கு குளித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 150க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர்.ராஜபாளையம் தீயணைப்பு துறையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர், மம்சாபுரம் போலீசார், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆற்றை கடக்க முடியாமல் தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்கள் ஒரு குழுவாக ஆற்றில் நடந்து சென்று, கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவராக மீட்டு அழைத்து வந்தனர்.
இரவு, 9:30 மணி வரை, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரையும் மீட்டனர்.
மலை உச்சியில் குளிக்க சென்ற 5 பேர் மட்டும் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு அழைத்து வர வனத்துறையினர் விரைந்தனர்.