/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் புதிய குளங்கள் பணிகளில் 1809ல் 1512 நிறைவு
/
மாவட்டத்தில் புதிய குளங்கள் பணிகளில் 1809ல் 1512 நிறைவு
மாவட்டத்தில் புதிய குளங்கள் பணிகளில் 1809ல் 1512 நிறைவு
மாவட்டத்தில் புதிய குளங்கள் பணிகளில் 1809ல் 1512 நிறைவு
ADDED : மே 29, 2025 11:04 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.176.21 கோடியில் 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள்முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாத்தூர் பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வின் போது நுாறு நாள் வேலை திட்டத்தில் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
மாவட்டத்தில் புதிய சமுதாயக்குளங்கள் அமைக்கும் பணிகளில் அருப்புக்கோட்டையில் ரூ.19 கோடிக்கு 154 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 143 புதிய குளங்கள்அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 11 புதிய குளங்களுக்கான பணிகள் நடந்து வருகிறது.
விருதுநகரில் ரூ.10.97 கோடியில் 256 பணிகளில் 202ம், காரியாபட்டியில் ரூ.19.58 கோடியில் 193 பணிகளில் 168ம், நரிக்குடியில் ரூ.22.33 கோடியில் 127 பணிகளில் 114ம் முடிக்கப்பட்டுஉள்ளது. ராஜபாளையத்தில் ரூ.17.11 கோடியில் 129 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 104ம், சாத்துாரில் ரூ.12.12 கோடியில் 175 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 146ம், சிவகாசியில் ரூ.15.49 கோடியில் 167 பணிகளில், 116ம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.10.95 கோடியில் 125 பணிகளில் 102ம், திருச்சுழியில் 191 பணிகளில் 161ம், வத்திராயிருப்பில் 103 பணிகளில் 95ம் வெம்பக்கோட்டையில்189 பணிகளில் 161ம் என புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுஉள்ளது.
மொத்தம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ரூ.176.21 கோடிக்கு 1809 புதிய பணிகளில், 1512 முடிக்கப்பட்டு, 297 பணிகள் நடந்து வருகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.