/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கன்டெய்னர் லாரி அரசு பஸ் மோதல் கண்டக்டர் உட்பட 17 பேர் காயம்
/
கன்டெய்னர் லாரி அரசு பஸ் மோதல் கண்டக்டர் உட்பட 17 பேர் காயம்
கன்டெய்னர் லாரி அரசு பஸ் மோதல் கண்டக்டர் உட்பட 17 பேர் காயம்
கன்டெய்னர் லாரி அரசு பஸ் மோதல் கண்டக்டர் உட்பட 17 பேர் காயம்
ADDED : அக் 20, 2025 12:58 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே கன்டெய்னர் லாரியின் பின்னால் அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
திருப்பூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி அரசு பஸ்சை டிரைவர் சுதர்சிங் 52, ஓட்டிச்சென்றார். கண்டக்டராக மனவிளையைச் சேர்ந்த பவுல்ராஜ் 52, இருந்தார். எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே பஸ் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கொல்லம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் பின்னால் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும், லாரியின் பின்பகுதியும் சேதமானது. கண்டக்டர் பவுல்ராஜ், பயணிகள் அனுப்பிரியா 30, மாதவன் 40, பரத்குரு 32, ஜெயக்குமார் 37, கார்த்திக் சகாயம் 30, அந்தோணியம்மாள் உட்பட 17 பேர் காயமடைந்து சாத்துார், விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.