/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 18 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

UPDATED : மே 16, 2024 06:08 AM
ADDED : மே 16, 2024 06:04 AM
சிவகாசி : சிவகாசி ஆனையூரில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் மேலாளர்கள், போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 18 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மேலாளர்கள், போர்மேன்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பிற்கு முதல் முறை வரத் தவறினால் ரூ. 5 ஆயிரம் இரண்டாவது முறை ரூ. 10 ஆயிரம் தண்டனை கட்டணமாக சம்பந்தப்பட்ட அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மூன்றாவது முறையாக வரத் தவறினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்திருந்தார்.
அதன்படி மே 13 முதல் மே 17 வரை தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற 35 பட்டாசு ஆலைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் 18 தொழிற்சாலைகளில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
எனவே அந்த 18 தொழிற்சாலைகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.