/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறை நிரப்பும் போராட்டத்தில் 190 மாற்றுத் திறனாளிகள் கைது
/
சிறை நிரப்பும் போராட்டத்தில் 190 மாற்றுத் திறனாளிகள் கைது
சிறை நிரப்பும் போராட்டத்தில் 190 மாற்றுத் திறனாளிகள் கைது
சிறை நிரப்பும் போராட்டத்தில் 190 மாற்றுத் திறனாளிகள் கைது
ADDED : ஜன 22, 2025 09:32 AM
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 190 மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திராவைப் போல் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 முதல் 15 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை ஆதரித்து சி.பி.எம்., மாவட்டக்குழு உறுப்பினர் முத்துவேலு பேசினார்.
மாவட்ட நிர்வாகிகள் ஏ.குமரேசன், பி.எஸ்.சுப்புராஜ், பி.ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 190 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த போராட்டத்தில் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.