/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது
ADDED : செப் 21, 2024 12:50 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ராமச்சந்திராபுரத்தில் கண்டக்டரிடம் சில்லறை கேட்ட தகராறில் தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே கண்மாய்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் தனியார் பஸ்சின் டிரைவராக உள்ளார். அதே பஸ்சில் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுாரைச் சேர்ந்த அய்யனார் 24, கண்டக்டராக பணிபுரிகிறார்.
இந்த பஸ்சில் நேற்று ராமச்சந்திராபுரம் புதுாரைச் சேர்ந்த கோபால் ராஜ் 31, பயணித்தார். தன் ஊருக்கு டிக்கெட் எடுத்த அவர் மீதம் சில்லறை ரூ. 2 ரூபாயை கண்டக்டர் அய்யனாரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபால்ராஜ் ஆனையூரில் பஸ்சிலிருந்து இறங்கினார்.
அந்த பஸ் மீண்டும் வந்த போது கோபால் ராஜ், நண்பர் வைரமணியுடன் 35, முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இருவரையும் மாரனேரி போலீசார் கைது செய்தனர்.