ADDED : நவ 25, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: நத்தம் பட்டி எஸ்.ஐ. உதயசூரியன் நேற்று முன்தினம் இரவு அழகாபுரி அருகே வாகன சோதனை செய்யும் போது, டூவீலரில் வந்த வத்திராயிருப்பு போத்திராஜ் 29, முருகேசன் 29 ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வத்திராயிருப்பு பகுதியில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1.9 கிலோ கஞ்சா, விற்பனை பணம் ரூ. 24 ஆயிரம், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

