/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லை துாக்கிப்போட்டு வாலிபரை கொன்ற வழக்கில் 2 பேர் கைது
/
கல்லை துாக்கிப்போட்டு வாலிபரை கொன்ற வழக்கில் 2 பேர் கைது
கல்லை துாக்கிப்போட்டு வாலிபரை கொன்ற வழக்கில் 2 பேர் கைது
கல்லை துாக்கிப்போட்டு வாலிபரை கொன்ற வழக்கில் 2 பேர் கைது
ADDED : நவ 01, 2025 03:15 AM

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வாலிபரை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த வழக்கில் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
செந்நிலைகுடி தொழிலாளி அசோக்ராஜ் 37. இவர் மதுரையில் உடைந்த பாத்திரங்களை அடைக்கும் தொழில் செய்து வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்று அசோக் ராஜ் தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அதிகாலையில் ஊரில் நாடக மேடை அருகே அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி.எஸ்.பி., பொன்னரசு, இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் விசாரித்தனர். அசோக்ராஜ் உடன் சென்ற உறவினர்கள் சங்கர், 57, சுந்தரமூர்த்தியை 43, விசாரித்த போது சொத்து சம்பந்தமாக அவர்களுக்குள் பிரச்னை இருந்துள்ளது. சம்பவத்தன்று அசோக்ராஜை தனியாக கூட்டிச் சென்று மது வாங்கி கொடுத்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

