/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் மழை பெய்யாததால் மக்காச்சோள விவசாயிகள் பாதிப்பு
/
சாத்துாரில் மழை பெய்யாததால் மக்காச்சோள விவசாயிகள் பாதிப்பு
சாத்துாரில் மழை பெய்யாததால் மக்காச்சோள விவசாயிகள் பாதிப்பு
சாத்துாரில் மழை பெய்யாததால் மக்காச்சோள விவசாயிகள் பாதிப்பு
ADDED : நவ 01, 2025 05:30 AM
சாத்துார்: சாத்துார் அருகே என். மேட்டுப்பட்டி சுற்றுப்பகுதியில் போதுமான அளவு மழை பெய்யாததால் மக்காச்சோள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
என். மேட்டுப்பட்டி, முத்துச் சாமிபுரம், பாப்பாகுடி, மாயூர் நாதபுரம், நென்மேனி உள்ளிட்ட பகுதிகளில் பல நுாறு ஏக்கர் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் புரட்டாசி பட்டத்தில் மக்காச்சோளம் விதைத்திருந்தனர்.
ஆனால் தொடர்ந்து மழை பெய்யவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ 4000 செலவிட்டு நான்கு முறை விதை வாங்கி மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் விதைத்தும் தற்போது வரை போதுமான மழை பெய்யாததால் பயிர்கள் வளராமல் கருகிய நிலையில் உள்ளது.
இதனால் வங்கியில் கடன் வாங்கி விவசாய பணியை மேற்கொண்ட விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் தனுஷ்கோடி ராஜ் கூறியதாவது: புரட்டாசி மாதம் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி, ஆகிய விதைகளை வாங்கி நடவு செய்தோம். ஆனால் புரட்டாசி மாதம் போதுமான மழை பெய்யவில்லை.
மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விதைகள் கருகிய போதும் நான்கு முறை உழவு செய்து மக்காச்சோளம் விதைத்தோம். ஆனால் மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகின்றன.
பருத்திச் செடி மட்டும் ஓரளவு வளர்ந்துள்ளது.மழை பெய்யாததால் பாதிக்கப்பட்ட மானாவாரி விவசாயிகளுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். என்றார்.

