ADDED : நவ 01, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் புவியியல் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் முத்து முருகன், 35.தலைமையில் போலீசார் ஏழாயிரம் பண்ணையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அவ்வழியாக ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. டிரைவர் தப்பி ஓடினார். ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

