விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட அளவிலான அண்ணாதுரை பிறந்தநாள் நெடுந்துார ஓட்டப் போட்டிகள் நவ. 9ல் நடக்கிறது.
18 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் ஆண்களுக்கு 8 கி.மீ., பிரிவிலும், பெண்களுக்கு 5 கி.மீ., பிரிவிலும், 25 வயதிற்கு மேல் நிரம்பியவர் களில் ஆண்களுக்கு 10 கி.மீ., பிரிவிலும், பெண்களுக்கு 5 கி.மீ பிரிவிலும் இப்போட்டிகள் நடத்தப் பட உள்ளன.
முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000, நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.ஆயிரமும், சான்றும் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவர்கள் தங்களது வயதுச் சான்றிதழை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று நவ. 9. காலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முன் ஆஜராக வேண்டும், என்றார்.

