/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி முதியவர் கொலை வழக்கில் திருப்பம் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது
/
ஸ்ரீவி முதியவர் கொலை வழக்கில் திருப்பம் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது
ஸ்ரீவி முதியவர் கொலை வழக்கில் திருப்பம் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது
ஸ்ரீவி முதியவர் கொலை வழக்கில் திருப்பம் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது
ADDED : மே 28, 2024 10:15 PM

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் ராமர் 60, அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ராம்குமார் 30, ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவுடன் 43, நேற்று முன்தினம் இரவு பெங்களூரூவில் பிடிபட்டார். அவர்களை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் சத்தியசீலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யாநகரைச் சேர்ந்த ராமருக்கும் அதே பகுதி ராமசாமி குடும்பத்தினருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. மே 21 இரவு அங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ராமர் குடும்பத்தினர் சென்றனர். கோயிலில் தனிப்பட்ட முறையில் சிங்கம் சிலை வைக்க ராமசாமி குடும்பத்தினர் கூறினர். இதற்கு ராமரும் மற்றும் ஊரில் உள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி 65, அவரது மகன்கள் ராம்குமார் 30, ராஜேந்திரன் 35, ஆகியோர் தாக்கியதில் ராமர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக ராமசாமி, மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன், அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் ஒரு பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராம்குமார் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மே 25 இரவு ராமர் இறந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு ராம்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் பெங்களூரூவில் ராம்குமாரை பிடித்தனர். அவருடன் ராமநாதபுரத்தில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சத்திய சீலாவும் 43, இருந்துள்ளார். இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் விசாரித்து வருகின்றனர்.
இருவரையும் போலீசார் கைது செய்து நேற்றிரவு 8:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாரதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ராமநாதபுரம் : இதற்கிடையில் பெண் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா பணிக்கு வராதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., துரை உத்தரவிட்டார். அந்த உத்தரவை நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் ராமநாதபுரம் போலீசார் வழங்கினர்.