/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
32 டூ வீலர்கள் எரிப்பு 2பேருக்கு 5 ஆண்டு சிறை
/
32 டூ வீலர்கள் எரிப்பு 2பேருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 26, 2025 01:54 AM
சாத்துார்: ஆலங்குளம் பொன் பாண்டியன் பழைய டூவீலர்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரிடம் 2023 ஏப்ரல் மாதம் கிழராஜகுலராமன் சேர்ந்த சந்தனகுமார், 27.சுண்டங்குளம் மதன்குமார், 22.ஆகியோர் டூ வீலர் வாங்கினர்.
டூ வீலர் வாங்கிய சில நாட்களில் பழுதானது. இதனால் இருவரும் அவரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து தாக்கினர். பொன் பாண்டியன் போலீசில் புகார் செய்தார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இருவரும் நள்ளிரவில் கடை முன்பு நிறுத்தியிருந்த 32 டூவீலர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சாத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜர் ஆனார்.