/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் அரிசி கடத்திய 2 விற்பனையாளர்கள் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய 2 விற்பனையாளர்கள் கைது
ADDED : மே 16, 2025 07:15 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் ரேஷன் கடையில் இருந்து 40 மூடைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய இரு விற்பனையாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் அருள்மொழி ஜெகன் 43. இவர் திருத்தங்கல் பாண்டியன் நகர் 21 வது ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். திருத்தங்கல்லைச் சேர்ந்த ராமையன் 53, 28 வது கடையில் விற்பனையாளராக உள்ளார். இந்த இரு கடைகளிலும் இருந்து தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த சீனிபாண்டி ஏற்பாட்டில் மாரீஸ்வரன் 24, லோடு வேனில் 40 மூடைகளில் 1600 ரேஷன் அரிசியை கடத்தினார். விருதுநகர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இரு விற்பனையாளர்கள் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.