/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார் மோதியதில் டூவீலரில் சென்ற 2 வாலிபர்கள் பலி
/
கார் மோதியதில் டூவீலரில் சென்ற 2 வாலிபர்கள் பலி
ADDED : செப் 23, 2024 02:31 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்ற மதுரை மாவட்டம் பாரப்பட்டியைச் சேர்ந்த அன்பு 22, சூர்யா 20, மீது கார் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.
பாரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அன்பு (எ) பால்பாண்டி, சூர்யா. இவர்கள் நேற்று காலையில் டூவீலரில் சாத்துார் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து மதியம் 12:50 மணிக்கு சொந்த ஊர் செல்ல நான்கு வழிச்சாலையில் நடுவப்பட்டி விலக்கு அருகே வந்த போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தில் இருந்து குழாய் ஒன்று திடீரென ரோட்டில் விழுந்தது.
இந்த குழாயில் டூவீலர் ஏறியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இவர்கள் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகினர். போலீசார் விசாரிக்கின்றனர்.