/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ரூ.400 கோடிக்கு 2025 காலண்டர் வர்த்தகம்
/
சிவகாசியில் ரூ.400 கோடிக்கு 2025 காலண்டர் வர்த்தகம்
சிவகாசியில் ரூ.400 கோடிக்கு 2025 காலண்டர் வர்த்தகம்
சிவகாசியில் ரூ.400 கோடிக்கு 2025 காலண்டர் வர்த்தகம்
ADDED : ஜன 02, 2025 12:30 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு 300 க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு இங்குள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டிற்கான ஆல்பத்தை வெளியிடுவர். புதிய ஆல்பங்களை தங்களது ஏஜன்டுகள், வாடிக்கையாளர்கள், மக்களுக்கு அறிமுகம் செய்வர். இதன் பின்னர் வருகின்ற ஆர்டர்களுக்கு புதிய ஆண்டிற்கான மாதாந்திர, தினசரி, டேபிள் காலண்டர் தயாரிக்கும் பணிகள் துவங்கும்.
2025 ம் ஆண்டிற்கான காலண்டருக்கு 2024 நவ. வரை ஆர்டர் பெறப்பட்டு டிச. ல் காலண்டர் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்தது.
சிவகாசியில் ரூ. 15 முதல் ரூ. 2500 வரை காலண்டர் பல்வேறு விதங்களில் கிடைக்கிறது.
விலைவாசி கட்டுக்குள் இருந்தாலும் மின் கட்டண உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காலண்டர் 10 சதவீதம் வரை விலை உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது இதுவரையிலும் பெறப்பட்ட ஆர்டரில் 90 சதவீதம் வரை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 400 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில் ' பெறப்பட்ட ஆர்டரில் 90 சதவீதம் வரை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே காலண்டர் ஆர்டர் பெறப்பட்டிருந்தாலும் 2025 பொங்கல் வரையிலும் ஒரு சில ஆர்டர் வரும். இதனால் மேலும் வர்த்தக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது 'என்றனர்.