/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் 21 நாட்களாக பணம் தாமதம்--
/
நெல் கொள்முதல் நிலையங்களில் 21 நாட்களாக பணம் தாமதம்--
நெல் கொள்முதல் நிலையங்களில் 21 நாட்களாக பணம் தாமதம்--
நெல் கொள்முதல் நிலையங்களில் 21 நாட்களாக பணம் தாமதம்--
ADDED : பிப் 16, 2025 05:30 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 21 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாதது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அம்மையப்பன், ராஜபாளையம் நகர் வட்டார தலைவர் கேசவ ராஜா முன்னிலை வகித்தனர்.
இதில் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் விதிப்படி விவசாயிகளிடம் பெற்ற தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் படம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
இருப்பினும் தற்போது 21 நாள் கடந்தும் நெல்லுக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இதனால் நெல்லை அனுப்பி தேவைகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர் செயலாளர் மற்றும் பிள்ளையார் நன்றி கூறினார்.

