/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது ரூ.60 லட்சம் பறிமுதல்

ADDED : ஏப் 17, 2025 01:39 AM
வத்திராயிருப்பு,:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை நடத்திவருபவரின் வீட்டில் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ. 60 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார் 43. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே எஸ். ராமச்சந்திரபுரம். மார்ச் 9 அன்று தனது உறவினர் திருமணத்திற்காக அவர் எஸ். ராமச்சந்திரபுரம் வீட்டுக்கு வந்துவிட்டு பொள்ளாச்சி சென்றார். ஏப். 3 காலை அவரது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வந்தனர்.
அதில் ஜெயக்குமாரின் உறவினரும், அவரிடம் பல ஆண்டுகளாக வேலை பார்த்து தற்போது கோவையில் வசித்து வரும் தமிழ்மணி 47, மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்ததில், கோவை போத்தனூரை சேர்ந்த நவ்சத் 43, பாலக்காடு ஜாகிர் உசேன் 50, ஆகியோருடன் சேர்ந்து எஸ் ராமச்சந்திரபுரத்திற்கு காரில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ 60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.