/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது
/
450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது
ADDED : நவ 19, 2024 04:57 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே புலிக்குறிச்சி சந்திப்பில் நேற்று முன் தினம் இரவு உணவு கடத்தல் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் 450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரிய வந்தது. காரில் வந்த கடலாடி புனவாசல் பகுதியைச் சேர்ந்த திருமுருகன்,32, திருப்பாண்டி,25, அஜித்குமார், 25, ஆகியோரிடம் விசாரித்ததில், கடலாடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள துவரம் பருப்பு மூடைகளை கடத்தி விருதுநகர் கொண்டு செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து ரேஷன் துவரம்பருப்பு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.