/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது
/
பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது
ADDED : ஆக 29, 2025 05:35 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் பால் கண்ணன் 46. இவரது இரு மகன்களான கிருஷ்ணராஜன், கிருஷ்ணபிரபு சிவகாசி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகின்றனர். ஆடி பதினெட்டு அன்று நடந்த திருவிழாவின் போது திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று சிறுவர்கள், 15 வயது சிறுவன் ஆகியோர் நடனம் ஆடியதில் தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணபிரபு அவர்களை கண்டித்தார்.
இந்நிலையில் சிறுவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் பால் கண்ணன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஜன்னல் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுவர்கள் தப்பினர். திருத்தங்கல் போலீசார் மூன்று சிறுவர்களை கைது செய்து,15 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.