/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சி 21 வது வார்டில் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லை: ஒரு ஆண்டாக மக்கள் அவதி

ADDED : ஆக 28, 2025 11:55 PM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 21 வது வார்டு கருணாநிதி காலனியில் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் ஒரு ஆண்டாக குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி 21 வது வார்டு திருத்தங்கல் கருணாநிதி காலனியில் மூன்று தெருக்கள் உள்ளன. இங்கு இதுவரையில் புழக்கத்திற்கு என தண்ணீர் வினியோகம் செய்ததில்லை. இதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு முன்பு மூன்று தெருகளிலும் புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்வதற்காக 4 மாதத்திற்கு முன்பு மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்த நிலையில் அந்தத் தொட்டி உடைந்து கீழே விழுந்து விட்டது. இதனால் இப்பகுதியினர் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் மீண்டும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியினருக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுகின்ற குடிநீர் போதாத நிலையில் புழக்கத்திற்கு தண்ணீருக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர்.
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் குளிக்க துணி துவைக்க என அனைத்து தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். கூலி வேலை செய்யும் இப்பகுதி மக்களால் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து புதிதாக தொட்டி அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் எந்தப் பணியும் நடைபெறவில்லை. எனவே நிதி ஒதுக்கி உடனடியாக தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.