/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தகாத உறவு விவகாரத்தில் 3 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
/
தகாத உறவு விவகாரத்தில் 3 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 21, 2025 12:54 AM
விருதுநகர்: தகாத உறவு விவகாரத்தில் சிக்கிய மூன்று ஏட்டுகளை, விருதுநகர் எஸ்.பி., கண்ணன், நேற்று முன்தினம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர்.
அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். நேற்று பணி ஒழுங்கீனம்' என்பதை குறிப்பிட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இன்னொரு சம்பவத்தில், விருதுநகர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்த ஏட்டுக்கும், சக பெண் ஏட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெண்ணிடம் பேசுவதை ஏட்டு தவிர்த்தார்.
இதனால், டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த பெண் ஏட்டு, பேச மறுத்த ஏட்டிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, இரண்டு ஏட்டுகளையும் எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

