/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவியல், இயற்கையை அறிய துாண்டும் ஆர்வம்
/
அறிவியல், இயற்கையை அறிய துாண்டும் ஆர்வம்
ADDED : நவ 20, 2025 03:59 AM

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து 4வது புத்தகத்திருவிழா நடத்துகிறது.
இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது.
நவ.24 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம்.
மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடக்கிறது.
தினமலர் சந்தா செலுத்தினால்
ரூ.1000 மதிப்பில்
புத்தகங்கள் இலவசம்
புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 33ல் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சத்தில் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு, ரூ.5 லட்சத்தில் தனிநபர் விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

