/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பஜாரில் பாலப்பணிகள் தீவிரம்
/
காரியாபட்டி பஜாரில் பாலப்பணிகள் தீவிரம்
ADDED : நவ 20, 2025 03:44 AM

காரியாபட்டி: காரியாபட்டி பஜாரில் குறுகலாக இருந்த பாலம் அப்புறப்படுத்தப்பட்டு அகலமான பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காரியாபட்டியில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் இருந்தது. பஜார் பகுதியில் குறுகலாக இருந்த பாலத்தில் இரு வாகனங்கள் விலகிச் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து நடந்தது.
இதைத்தொடர்ந்து பஜாரில் இருந்த குறுகலான பாலம் அப்புறப்படுத்தப்பட்டு அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பஸ்கள் அனைத்தும் முக்கு ரோடு, பைபாஸ் வழியாக மதுரை, அருப்புக்கோட்டைக்கு சென்று வருகிறது.
ஊருக்குள் போக்கு வரத்து இல்லாததால் கிராமப்புறங்களுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. முக்கு ரோட்டில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் பாலத்தை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து பால வேலை தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விரைந்து முடித்து, போக்குவரத்திற்கு திறந்து விட முனைப்பு காட்டி வருகின்றனர்.

