/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோவில் காவலாளிகள் கொலை தப்பிய கைதிக்கு கால் முறிவு
/
கோவில் காவலாளிகள் கொலை தப்பிய கைதிக்கு கால் முறிவு
கோவில் காவலாளிகள் கொலை தப்பிய கைதிக்கு கால் முறிவு
கோவில் காவலாளிகள் கொலை தப்பிய கைதிக்கு கால் முறிவு
ADDED : நவ 20, 2025 02:12 AM

ராஜபாளையம்: கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர், போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நவ., 10ல் பணியில் இருந்த இரவு காவலாளிகள் பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு, உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், தேவதானத்தை சேர்ந்த நாகராஜ், 25, என்பவரை நவ., 12ல் பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க அழைத்துச் சென்றனர். அப்போது நாகராஜ் போலீசாரை தாக்கியதால், காலில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த தேவதானத்தை சேர்ந்த முனியசாமியை, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள், உடைக்கப்பட்ட கேமரா பதிவு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் போன்றவற்றை, தேவதானம் இரட்டை பாலம் அருகே பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
முனியசாமியை அழைத்து சென்று பொருட்களை மீட்ட நிலையில், நேற்று மதியம் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தப்ப முயன்றார். இதில் அவருக்கு வலது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

