sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கூட்டுறவு சங்கங்களில் மல்டி வைட்டமின்  சத்து இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்தம் : விவசாயிகள் அதிருப்தி

/

 கூட்டுறவு சங்கங்களில் மல்டி வைட்டமின்  சத்து இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்தம் : விவசாயிகள் அதிருப்தி

 கூட்டுறவு சங்கங்களில் மல்டி வைட்டமின்  சத்து இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்தம் : விவசாயிகள் அதிருப்தி

 கூட்டுறவு சங்கங்களில் மல்டி வைட்டமின்  சத்து இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்தம் : விவசாயிகள் அதிருப்தி


ADDED : நவ 19, 2025 07:48 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மல்டி வைட்டமின் நுண்ணுாட்ட சத்து இணை பொருட்கள் வாங்க நிர்பந்திப்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திரா யிருப்பு பகுதிகளில் நெல் விளைச்சல் தீவிரமடைந்துள்ளது. அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி பகுதிகளில் மக்காசோள விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் உரம் போன்ற இடுபொருட்களை வாங்கி பயிர்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

வழக்கமாக நெல்லுக்கு ஜிங்க் சல்பேட் எனும் நுண்ணுாட்டம் இடப்படுவது வழக்கம். அதுவே போதுமானதாக இருக்கும் சூழலில் யூரியா வாங்கும் போதும் மல்டி வைட்டமின் நுண்ணுாட்ட சத்து இணை பொருட்களை வாங்க டான்பெட் நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களை வற்புறுத்துகிறது.

வழக்கமாக நெல் பயிர் சாகுபடியின் போது மண் பரி சோதனை பார்த்து விட்டு மல்டி வைட்டமின் தேவைப்பட்டால் குறைந்த செலவில் வேளாண் துறையே தரும். ஆனால் இப்போது மண்ணின் தன்மை அறியாமல் எல்லோரும் கட்டாயம் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் 10 டன் யூரியா வாங்கினால் நுாறு பாக்கெட் மல்டி வைட்டமின் வாங்க கூறுகின்றனர். இதை சங்கங்களின் வாங்கி விற்கும் போது ஒரு பாக்கெட்டின் விலை ரூ.50 வரை விற்கப் படுகிறது.

இது விவசாயிகளுக்கு தேவையற்ற செலவு. மேலும் அரசின் விதி படி 2 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் உரம் விற்கும் போது இணை பொருட்கள் விற்கக் கூடாது என்ற உத்தரவு உள்ளது.

இந்த விதியை ஏற்கனவே தனியார் உரக்கடைகள் மதிக்காமல், வலுக்கட்டாயமாக இணை பொருட்களை விற்று வரும் சூழலில், தற்போது கூட்டுறவு சங்கங்களிலும் அரசு விதியை மீறும் வகையில் இணை பொருட்கள் விற்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் அம்ரிதா கூறுகையில், இணை பொருட்களை வாங்க யாரையும் வற்புறுத்தவில்லை.

எந்த பகுதியில் புகார் வந்தது என்று தெரிந்து அது தடுத்து நிறுத்தப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us