ADDED : நவ 25, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.
மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ் 21, சாமுவேல் ராஜன் 20, 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

