/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது
/
திருச்சுழியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது
ADDED : பிப் 10, 2024 04:13 AM

திருச்சுழி: திருச்சுழியில் பைக்கில் வந்தவரிடம் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சுழி அருகே தமிழ் பாடியைச் சேர்ந்தவர் பாக்கியம், 53, இவர் நேற்று முன் தினம் அதிகாலை 3:00 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த மதுரை வீரன், மணிகண்டன், மூக்கையா ஆகியோருடன் 2 பைக்குகளில் திருச்சுழி பூமிநாதன் கோவில் அருகே சென்ற போது, 3 பேர் அவர்களை வழிமறித்து பாக்கியத்திடம் கத்தியை காட்டி மிரட்டி 300 ரூபாய் பணத்தை பறித்து வாகனத்தில் தப்பி ஓடி விட்டனர்.
எஸ் ஐ. , வீரணன் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தேவகோட்டையைச் சேர்ந்த சூர்யா,25, கமுதி செய்யாமங்கலத்தைச் சேர்ந்த பூவலிங்கம்,27, ஹிருத்திக் ரோஷன்,19, என தெரியவந்தது.
மூன்று பேரும் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
போலீசார் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.