/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூட்டிய வீட்டில் 15 பவுன் திருட்டு நகை தொழிலாளி உட்பட 3 பேர் கைது
/
பூட்டிய வீட்டில் 15 பவுன் திருட்டு நகை தொழிலாளி உட்பட 3 பேர் கைது
பூட்டிய வீட்டில் 15 பவுன் திருட்டு நகை தொழிலாளி உட்பட 3 பேர் கைது
பூட்டிய வீட்டில் 15 பவுன் திருட்டு நகை தொழிலாளி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜன 26, 2025 08:24 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் பூட்டிய வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போன வழக்கில் நகை பட்டறை தொழிலாளி கோபிநாத் 33, ஜோதி மணிகண்டன், ரஞ்சித் குமார் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் துடியாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் 54.
துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தங்கி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கமலா 48, திண்டுக்கல்லில் கல்லூரியில் படிக்கும் மகளுக்கு துணையாக அங்கு வசித்து வருகிறார்.
ஆகஸ்ட் மாதம், தனது 15 பவுன் தங்க நகைகளை பீரோவில் வைத்து பூட்டி விட்டு திண்டுக்கல் சென்று விட்டார். ஜன.13ல் தனது வீட்டிற்கு வந்து, பீரோவை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை.
ஸ்ரீவில்லிபுத்துார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஜோதிமணிகண்டனிடம் விசாரித்தார். இதில் தனது வீட்டின் மாடி வழியாக கமலாவின் வீட்டிற்குள் இறங்கி பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்றதும், தனது உறவினர் மம்சாபுரம் ரஞ்சித் குமார் 32 என்பவர் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், 8 பவுன் நகைகளை அடகு வைத்ததும், மீதி நகைகளை நகை பட்டறையில் பணியாற்றும் கோபிநாத் 33, என்பவரிடம் கொடுத்து உருக்கி விற்றதும் தெரிய வந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, 15 பவுன் நகைகளை மீட்டனர்.