/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் உயிரிழப்பு
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 19, 2025 11:57 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஏ.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுந்தரேஸ்வரி 29. இவருக்கு 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாத்ரூமில் குளிக்க வாட்டர் ஹீட்டர் சுவிட்சை ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி பலியானார். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஹனிமூன் ஜோ 37, இவர் நேற்று முன்தினம் இரவு பாத்ரூமில் தவறி விழுந்து உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.
* மல்லி முள்ளி குளத்தை சேர்ந்தவர் பெருமாள் 44,கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் விசாரித்தனர்.