/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீசாரை ஆயுதங்களுடன் தாக்க முயன்ற 3 இளைஞர்கள் கைது
/
போலீசாரை ஆயுதங்களுடன் தாக்க முயன்ற 3 இளைஞர்கள் கைது
போலீசாரை ஆயுதங்களுடன் தாக்க முயன்ற 3 இளைஞர்கள் கைது
போலீசாரை ஆயுதங்களுடன் தாக்க முயன்ற 3 இளைஞர்கள் கைது
ADDED : நவ 07, 2025 02:21 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரோந்து சென்ற போலீசாரை ஆயுதங்களுடன் தாக்க முயன்ற அஜித்குமார் 33, மாரிச்செல்வம் 24, பாலாஜி29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை டவுன் எஸ்.எஸ்.ஐ., முருகன் தலைமையில் 3 போலீசார் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நேற்று முன் தினம் அதிகாலை 2:30 மணிக்கு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ஆழாக்கு அரிசி விநாயகர் கோயில் அருகில் டூவீலர்களில் 3 இளைஞர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டபோது ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணபேரியைச் சேர்ந்த மாரிச்செல்வம், திருநெல்வேலியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் டூவீலர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

