/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்தை தவிர்க்க நரிக்குடி சர்வீஸ் ரோடு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா

ADDED : நவ 07, 2025 03:30 AM

காரியாபட்டி: அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் மந்திரி ஓடை அருகே உள்ள நரிக்குடி சர்வீஸ் ரோட்டை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடிக்கு ஆரம்பத்தில் மந்திரிஓடை ஒட்டியே ரோடு இருந்தது. இந்நிலையில் 4 வழி சாலை ஏற்படுத்தப்பட்ட பின், 200 மீ., துாரம் உள்ள பழைய ரோடு மூடப்பட்டது.
தற்போது அனைத்து வாகனங்களும், நான்கு வழிச்சாலையில், ஒரு வழி பாதையில் செல்ல வேண்டி யிருக்கிறது. அதி வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் பலியாகினர்.
இதையடுத்து 200 மீ., தூரம் உள்ள ரோட்டை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்கவில்லை. நரிக்குடி ரோட்டில் திரும்புவதற்குள் வாகன ஓட்டிகள் படாதபாடுபடுகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படு வதற்கு முன், சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மற்ற வாகனங்கள் இடையூறு இன்றி எளிதாக செல்ல முடியும். இதனை கருத்தில் கொண்டு பயன்பாடின்றி கிடக்கும் ரோட்டை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.