/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
7 பவுன் நகை பறிப்பு 3 வாலிபர்கள் கைது
/
7 பவுன் நகை பறிப்பு 3 வாலிபர்கள் கைது
ADDED : செப் 26, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: கோயம்புத்துாரை சேர்ந்தவர் சண்முக பாண்டியன் 46, இவர் சங்கரன் கோவிலில் அடகு வைத்திருந்த தனது 7 பவுன் நகையை மீட்டு ஊர் திரும்பும் வழியில் ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் இறங்கி உள்ளார். அருகிலுள்ள கடைக்கு செல்லும் போது எதிரே வந்த மூன்று பேர் இவரது கை பையை பறித்துக் கொண்டு ஓடினர்.
வடக்கு போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் பாரில் தற்காலிக ஊழியராக இருந்த அழகுராஜா 28, வெங்கடேஷ் 32, பாரில் குடிக்க வந்த பாரதி 25, உள்ளிட்ட மூன்று பேர் நகையை பறித்து சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.